அரசியல் தொடக்கமும் சினிமா முடிவும்... ஒரே நாளில் பூஜை போட்ட விஜய்.!

அரசியல் மாநாட்டுக்கான முதல் பூஜையும், தன் இறுதிப் படத்துக்கான பூஜையும் ஒரே நாளில் நடத்தியுள்ளர் நடிகர் விஜய்.

TVKMaanadu thalapathy 69

சென்னை :விஜய் இன்று ஒரேநாளில் தனது முதல் அரசியல் மாநாட்டுக்கான பூஜையையும், கடைசிப் படத்திற்கான பூஜையையும் நடத்தியுள்ளார்.

H.வினோத் கூட்டணியில் பாபி தியோல், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘தளபதி 69’ படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்க, விக்கிரவாண்டியில் நடக்க உள்ள தவெக மாநாட்டிற்கான பூஜையும் நடந்தது.

unknown node

இயக்குநர் ஹெச் வினோத் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். கடந்த இரு தினங்களாக படத்தில் நடிக்க கூடிய, முக்கிய நடிகர்கள் தொடர்பான போஸ்டர் மற்றும் படக்குழுவினர் பற்றிய அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகின்றனர்.

unknown node

இந்த நிலையில், இப்படத்தின் பூஜை விழா இன்று சென்னை ஈசிஆரில் நடைபெற்றது, இதில் முக்கிய நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, விக்கிரவாண்டியில் TVK மாநாடு நடைபெற உள்ள இடத்தில் இன்று அதிகாலை பூமி பூஜை செய்யப்பட்டது.

unknown node

மேலும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில், மாநாட்டுக்கான பந்தக்கால் நடப்பட்டது. இதனால், ஒரேநாளில் அவர் அரசியல் தொடக்கத்துக்கும், சினிமா முடிவுக்கும் பூஜை போட்டதாக, நெட்டிசன்கள் சிலாகித்து வருகின்றனர்.

unknown node

தளபதி 69

படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கவுதம் மேனன், பிரியாமணி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  ஒளிப்பதிவாளராக சத்யன் சூர்யன், ஸ்டண்ட் இயக்குநராக அன்ல் அரசு, கலை இயக்குநராக செல்வகுமார், எடிட்டராக பிரதீப் இ.ராகவ், ஆடை வடிவமைப்பாளராக பல்லவி, கோபி பிரசன்னா ஆகியோர் தொழில்நுட்ப குழுவில் உள்ளனர்.

அரசியல் தொடக்கமும் சினிமா முடிவும்... ஒரே நாளில் பூஜை போட்ட விஜய்.!