கெத்தாக களமிறங்கிய வீரராகவன்.! தெறிக்கும் தளபதியின் பீஸ்ட் டிரைலர்.!

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்ததாக "பீஸ்ட்" திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்ததாக “பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜாஹெக்டே நடித்துள்ளார்.

unknown node

இயக்குனர் செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ், நடனஇயக்குனர் சதீஸ், உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

unknown node

இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும் இப்படத்திற்கான டிரைலர் ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியாகும் என கடந்த மார்ச் 31-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.

unknown node

அதன்படி, ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த “பீஸ்ட் ” திரைப்படத்தின் டிரைலரை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. டிரைலரில் டிரைலரில் அதிரடி ஆக்சன் கலந்த காட்சிகளுடன் விஜயின் மாஸ் வசனங்களுடன் அனிருத் இசை அட்டகாசமாக அமைந்துள்ளதால் ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக அமைந்துள்ளது.

unknown node