தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி....!!!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்க்கார் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்க்கார் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

அக.2ல் படத்தின் பாடல்கள் வெளியிடப்படும் என முன்பே அறிவிக்கபட்டிருந்தது. ஆனால் ரசிகர்களின் வேண்டுதலுக்கு இணங்க படத்தின் சிங்கிள் டிராக் மட்டும் வருகிற 24ல் முருகதாஸின் பிறந்தநாளுக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் அந்த 24ம் தேதி வரை கூட காத்திருக்க முடியாத விஜய் ரசிகர்கள் அப்டேட் ஏதாவது விடுங்கள் என்று சன்பிக்சர்ஸையும், சிங்கிள் ட்ராஸ்கின் பாடல் ஆசிரியர் ‘ ஆளப்போறான் ‘ விவேக்கையும் அன்பு தொல்லை செய்து வருகின்றனர்.

இதனால் மனம் இறங்கி வந்துள்ள விவேக் சன்பிக்சர்ஸிடம் ஒருசில பாடல் வரிகளையாவது வெளியிட பரிந்துரைப்பதாக கூறியுள்ளார். இதனால் பாடலின் சில வரிகள் இன்று வெளியாக அதிக வாய்ப்புள்ளது.