கேரளாவில் பெய்த கனமழையால், கிட்டத்தட்ட அந்த மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதுவரையில் 300 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். பலரும் தங்களது வீடு மற்றும் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
unknown nodeஅவர்களுக்கு பல தன்னார்வ தொண்டு நிருவனகளும், பல பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அதில் தற்போது சூர்யா ரசிகர் மன்றம் சார்பாக கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் 3 ட்ரக்குகள் மூலமாக அனுப்பி வைக்கபடுகிறது. ஏற்கனவே 1 ட்ரக் மூலமாக பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு ட்ரக்குகள் நாளை மதியம் அங்கு போய் சேர்ந்து புதன் அன்று நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு செல்லும் என சூர்யா ரசிகர் மன்றம் சார்பாக டிவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை இயக்குனர் விக்னேஷ் சிவன் டிவிட்டரில் பகிர்ந்து ‘ அன்பான சூர்யா ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.