தளபதி விஜயுடன் மோதவுள்ளாரா சூர்யா?! சூரரைப் போற்று ரிலீஸ் அப்டேட்!

சூர்யா நடிப்பில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் சூரரை போற்று. இந்த படத்தை இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்

சூர்யா நடிப்பில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் சூரரை போற்று. இந்த படத்தை இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவாக நடைபெற்று வருகிறது.

unknown node

இபபடம் ஏர் டெக்கான் (விமான நிறுவனம்) உரிமையாளர் ஜி.ஆர்.கோபிநாத் என்பவரது வாழ்கை வரலாற்று படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இதில் சூர்யா தாடி, கூலிங் கிளாஸ், பிட்டான உடல் என எப்போதும் போல அழகாக இருக்கிறார். இப்படம் அடுத்த வருடம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை சூர்யாவே தயாரித்து வருகிறார்.இப்படம் முதலில் கிருஸ்துமஸிற்கு வெளியாகும் என கூறப்பட்டது. பிறகு பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது இப்படம் அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே கோடை விடுமுறைக்குத்தான் தளபதி விஜய் – விஜய் சேதுபதி  இணைந்து நடிக்கும் புதிய படமும் ரிலீசாக உள்ளது.