16 வருடங்கள் கழித்து மணிரத்னதுடன் இணையும் சூர்யா..?

இயக்குனர் மணிரத்னம்  நடிகர் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படம் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மணிரத்னம்  நடிகர் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படம் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மணிரத்னம் தற்பொழுது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கவுள்ளார் , இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது ,விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது, மேலும் இந்த படத்தை தொடர்ந்து ஒரு சிறிய வெப்சிரியஷை மணிரத்னம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படங்களை தொடர்ந்து மணிரத்னம் நடிகர் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படம் எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, மேலும் இவர் இருவரும் 16 ஆண்டுகள் கழித்து இணைவது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இருவரும் கடைசியாக ஆயுத எழுத்து படத்தில் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.