சர்கார் படத்துக்கு நவம்பர் 6 முதல் 16 வரை மதுரை மாவட்ட தியேட்டர்களின் வசூல் விவரங்களை ஆட்சியர் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
unknown nodeகடந்த நவம்பர் 1 ஆம் தேதி மதுரை சேர்ந்த மகேந்திரபாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த மனுவில் அரசாணையை பின்பற்றாமல் பல மடங்கு கூடுதல் கட்டணம் மல்டி பிளக்ஸ் திரையரங்கில் வசூலிப்பதாக தெரிவித்தார்.இதை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை,மதுரையில் சர்கார் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் தியேட்டர் உரிமத்தை ரத்து செய்யலாம் .மேலும் சர்கார் படம் வெளியாக உள்ள தியேட்டர்களில் கட்டணம் பற்றி தணிக்கைக்குழு ஆய்வு செய்யவேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.
unknown nodeஇந்நிலையில் இன்று (நவம்பர் 26 ஆம் தேதி ) மீண்டும் விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை,மதுரையில் சர்கார் திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளது.அதேபோல் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நவம்பர் 6 முதல் 16 வரை மதுரை மாவட்ட திரையரங்குகளின் தினசரி கட்டண வருவாய் அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.