மிரட்டும் வில்லத்தனம்... தலைவர் மாஸ் என்ட்ரி.! தெறிக்கவிடும் கூலி டீசர்.!

Coolie: ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 171வது படத்திற்கு ‘கூலி’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

Thalaivar171TitleReveal

Coolie:ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 171வது படத்திற்கு ‘கூலி’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தலைவர் 171’ படத்திற்கு“கூலி”என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அனிருத் இசையமைக்கிறார்.

தற்போது வெளியான படத்திற்கான டைட்டில் டீசரில் “அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் தப்பென்னா சரியென்ன எப்போதும் விளையாடு, ‘அப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாத” என்றும் “சோறு உண்டு சுகம் உண்டு மது உண்டு மாது உண்டு மனம் உண்டு என்றாலே சொர்க்கத்தில் இடம் உண்டு” என ரஜினி நடித்த பழைய படமான ரங்கா பட த்தின் வசனத்தை பேசி மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார்.

unknown node

ரஜினி தற்போது வேட்டையன் படத்தில் பிஸியாக இருப்பதன் காரணமாக இன்னும் தலைவர் 171 படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருக்கிறது. இருந்தாலும், படத்தின் டைட்டில் டீசரில் சண்டை போடும் காட்சிகள் ரஜினி ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது. டீசர் முழுக்க பிளாக் அண்ட் வைட்டாகவும், தங்கம் மட்டும் கோல்ட் நிறத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், படத்துக்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருவதாகவும், படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்கும் என தெரிகிறது.