சென்னை :கார்த்தி கிராமத்துச் சாயலில் இருக்கும் படங்களில் கை வைத்தாலே அந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் வந்துவிடும். ஏனென்றால், அவர் இதுவரை நடித்த பருத்தி வீரன், கொம்பன், விருமன் ஆகிய படங்கள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த வரிசையில், அவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் மெய்யழகன் படமும் இணைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால், அந்த அளவுக்குப் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகிறது. படம் செப்டம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதற்கு முன்னதாக பத்திரிக்கையாளர்களுக்கும், சினிமா விமர்சகர்களுக்கும், படத்தின் பிரீமியர் ஷோ போட்டுக்காட்டப்பட்டது. அதில் படத்தைப் பார்த்த பலரும் பாராட்டி, தனது சமூக வலைத்தள பக்கங்களில் பாசிட்டிவான விமர்சனங்களைக் கொடுத்துள்ளனர்.
படம் பார்த்த ஒருவர் ” மெய்யழகன் படம் நீங்கள் நினைப்பதை விட அருமையாக இருக்கும். படத்தில் வரும் காட்சிகள் நம்மளுடைய வாழ்வில் கனெக்ட் செய்யும் வகையில் இருக்கும். படத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி ஆகியோருடைய நடிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது” என கூறியுள்ளார்.
unknown nodeபடம் பார்த்த மற்றொருவர் ” மெய்யழகன் படம் ஒரு உணர்வுபூர்வமான படம். படத்தில் அந்த கதாபாத்திரங்களாகவே, அரவிந்த் சாமி, கார்த்தி வாழ்ந்திருக்கிறார்கள். சிறந்த நகைச்சுவை மற்றும் உங்களை எளிதில் எமோஷனலாக மாற்றக்கூடிய பல உணர்வுபூர்வமான காட்சிகள் இருக்கிறது. முதல் பாதி பிடித்திருந்தது. இரண்டாம் பாதியில் சில அரசியல் சார்ந்த விஷயங்கள் இடம்பெற்று இருந்தது.
unknown nodeஇது ஒரு சிறந்த முயற்சி என்றாலும், இது சற்று முரண்பாடானது. பார்வையாளர்களிடம் எப்படி வரவேற்பைப் பெறுகிறது என்பதைப் பார்க்க காத்திருக்கிறோம். சிறப்பான நடிப்பால் மறக்க முடியாத படமாக இருக்கும். இசை பல இடங்களில் நன்றாக இருக்கிறது, குறிப்பாக ஜல்லிக்கட்டு காட்சி” என கூறியுள்ளார்.
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node