இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்க கூடாது : நடிகர் விஷால்

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். குழந்தையின் உடலை மீட்க நான்கு நாட்களாக போராடிய நிலையில், இவர்களது முயற்சி தோல்வியில் முடிந்தது.இன்று அதிகாலையில், குலாண்டகியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. குழந்தையின் உயிரிழப்புக்கு பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிற நிலையில், நடிகர் விஷால் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு  பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில், ‘அப்பாவியான குழந்தை சுஜித்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். ஆழ்துளை கிணறுகளை மூடாமல் இருப்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.’ என்று பதிவிட்டுள்ளார்.