பொங்கலுக்கு வாரிசா..? துணிவா..? நடிகர் வடிவேலு சொன்ன பதில்...!

தமிழ் சினிமா ரசிகர்கள் ஒட்டுமொத்தாமாக விஜய் நடித்துள்ள வாரிசு படத்தையும், அஜித் நடித்துள்ள துணிவு படத்தையும் பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். இந்த இரண்டு

தமிழ் சினிமா ரசிகர்கள் ஒட்டுமொத்தாமாக விஜய் நடித்துள்ள வாரிசு படத்தையும், அஜித் நடித்துள்ள துணிவு படத்தையும் பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். இந்த இரண்டு படங்களும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

unknown node

Thunivu Vs Varisu [Image Source: Twitter ]

இந்த நிலையில், இரண்டு படங்களில் எந்த படங்கள் அதிகம் வசூல் செய்ய போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் செய்தியாளர்கள் பலரும் ரசிகர்களிடம் துணிவு படத்திற்கு போவீர்களா..? வாரிசு படத்திற்கு போவீர்களா..? என்ற கேள்வியை கேட்பது போல சினிமா பிரபலங்களிடமும் கேட்டு வருகிறார்கள்.

இதையும் படியுங்களேன்-அதிர்ச்சி…..வெண்ணிலா கபடி குழு பட பிரபலம் காலமானார்.! சோகத்தில் ரசிகர்கள்…

unknown node

Varisu Vs Thunivu [Image Source: Twitter ]

அந்த வகையில், நடிகர் வடிவேலு இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்திருந்தார். தரிசனம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பொங்கலுக்கு வாரிசா..? துணிவா..? எந்த படத்துக்கு போவீங்க என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

unknown node

Vadivelu [Image Source: Twitter ]

அதற்கு பதில் அளித்த வடிவேலு ” எனக்கு அதை பற்றி தெரியாது…எல்லா திரைப்படமும் நன்றாக ஓட வேண்டும். பெரிய பெரிய பெற்று தயாரிப்பாளர்கள் நன்றாக இருக்கவேண்டும். சினிமா இருந்தால் தான் எல்லாரும் நல்லா இருக்க முடியும்” என பதில் அளித்துள்ளார்.