சென்னை :இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் “வேட்டையன்” திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தற்பொழுது, படத்தின் ‘மனசிலாயோ’ முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்பாடலை மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலில் AI தொழில்நுட்ப உதவியுடன் உருவாகியுள்ளது.
unknown nodeசெம குத்து பாடலாக உருவாகியுள்ள இப்பாடலில் மஞ்சு வாரியார் செம குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மற்றும் வி.ஜே.ரக்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.
அது மட்டும் இல்லாமல், அமிதாப் பச்சனும், ரஜினிகாந்தும் 33 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தில் நடிகர்கள் தங்களது பகுதிகளுக்கான டப்பிங் பணியை சமீபத்தில் முடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
