சிவகார்த்திகேயன் தற்போது பிசியாக பல படங்களில் நடித்து வருகின்றார். இரும்புத்திரை இயக்குனர் மித்ரன், இயக்குனர் பாண்டிராஜ், இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார், விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படம் என பிசியாக நடிக்க உள்ளார்.
இதனை அடுத்து கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க ஆர்வம் உள்ளவர்கள் இருந்தால் தனது மெயில் ஐடிக்கு போட்டோ அனுப்புமாறு இயக்குனர் டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
unknown nodeஇந்த பதிவுக்கு கீழே, இயக்குனர் விக்னேஷ் சிவன், ‘ நான் ஆடிஷனுக்கு போட்டோ மெயில் அனுப்பிவிட்டேன், ஆனால் ரிப்ளை ஏதும் வரவில்லை என கூறியிருந்தார். இதற்க்கு இயக்குனர் நெல்சன், ‘ ஷூட்டிங் அப்போ நீங்கள் எந்த நாட்டில் இருப்பீர்கள் என தெரியவில்லை என கிண்டலாக கூறி இருந்தார்.
அதற்க்கு கீழே சிவகார்த்திகேயனும் தனது பங்கிற்கு, ‘ ரெமோ படத்தில் நடக்கும் ஆடிஷன் கட்சியை பதிவிட்டு சார் நான் இந்த ஊரில் தான் இருக்கிறேன் என கூறினார். தொடர்ந்து அனிருத், ரியோ, என பலர் இந்த டீவீட்டிற்கு கீழே பதிவிட்டு வந்தனர்.
unknown node