கமர்சியல் படங்கள் எடுப்பதில் சிறுத்தை சிவா வித்தியாசமானவர்! விஸ்வாசம்!!!

தல அஜித் நடிப்பில் இன்று ரசிகர்களின் ஆரவாரத்துடன் வெளியாகியுள்ள திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ்

தல அஜித் நடிப்பில் இன்று ரசிகர்களின் ஆரவாரத்துடன் வெளியாகியுள்ள திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பொங்கலுக்கு ஏற்றவாறு குடும்பங்கள் கொண்டாடும் வகையில் சென்டிமென்ட் ஆக்ஷ்ன் கலந்து படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நயன்தாராவிற்கு நல்ல கதாபாத்திரம் அமைந்துள்ளது.

கமர்சியல் படங்கள் என்றாலே பெண்களை கவர்ச்சி பொருளாக காட்டி, இரட்டை அர்த்த வசனங்களோடு படம் தயாராகும். ஆனால் அந்த வித்தத்தில் சிறுத்தை சிவா வித்தியாசமானவர் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். பெண்களின் கதாபாத்திரத்தை அபத்தம் இல்லாமல் கமர்சியல் படம் எடுத்து வருகிறார் என விமர்சகர்களும் பாராட்டி வருகின்றனர்.

DINASUVADU