இயக்குனர் சிறுத்தை சிவா விஸ்வாசம் படத்தை அடுத்து நடிகர் சூர்யாவை நாயகனாக வைத்து புதிய படம் எடுக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இது நேற்று முன்தினம் இயக்குனர் சிறுத்தை சிவா பிறந்தநாளை முன்னிட்டு சூர்யா – சிவா கூட்டணி உறுதியானது
unknown nodeஇதற்கு முன்னர் சிறுத்தை சிவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் ஒரு கதை கூறி ஓகே செய்துவிட்டதாகவும் அந்த படத்தை தான் முதலில் செய்ய போகிறார் என கோலிவுட் எதிர்பார்த்தது. ஆனால் சூப்பர் ஸ்டார் தரப்பிடம், ‘ முதலில் சூர்யாவிடம் கதை கூறி ஒப்பந்தம் செய்துவிட்டதால் அந்த படத்தை முடித்து விட்டு அடுத்து சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்குவதாக’ சிறுத்தை சிவா தரப்பு கூறியுள்ளது.
unknown nodeசூப்பர் ஸ்டார் ரஜினி படம் என்று கூட பாராமல், தான் முதலில் ஒப்புக்கொண்ட சூர்யா படத்தை முடித்துவிட்டு வருவதாக கூறிய இயக்குனர் சிறுத்தை சிவாவை கோலிவுட் ஆச்சர்யமுடன் பார்க்கிறது.