சிறகடிக்க ஆசை சீரியல்- முத்துவிடம் உண்மையை உளறிய பார்வதி..!

சிறகடிக்க ஆசை தொடரில்  இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த அதிரடியான முடிவு..

muthu ,meena (4) (1)

சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில்  இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த அதிரடியான முடிவு..

மீனா தான் பணத்தை திருடினாரா ?

முத்து பார்வதி வீட்டுக்கு போறாரு..  பார்வதி ஷாக்கா  நிக்கிறாங்க.. இதை பார்த்த முத்து என்னத்த வான்னு கூட சொல்ல மாட்டாங்களா   மீனாவ பத்தி உங்களுக்கு தெரியாதா அவ அப்படிப்பட்ட பொண்ணா.. நீங்க சந்தேகப்பட்டீங்கன்னு தெரிஞ்சு  அவ அழுதுட்டே இருக்கா எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல பேசாம நீங்க போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிருங்க அப்பதான் உங்களோட பணம் கிடைக்கும்.  இதுக்கு பார்வதி தயங்குறாங்க .. இல்ல முத்து அது  விஜயாவோட பணம் அப்படின்னு உண்மை எல்லாம் உளரிறாங்க ..அதோட கோவமா வீட்டுக்கு போறாரு முத்து. வீட்ல எல்லாரையும்  வர சொல்றாரு.. ஒரு சின்னதா ஒரு டிராமாவும் பண்றாரு ..மீனாதான் பணத்தை எடுத்து இருக்கா.. இத கேட்ட வீட்ல இருக்க எல்லாரும் ஷாக்கா நிக்கிறாங்க .விஜயா மட்டும் நான் அப்பவே சொன்னேன் இல்ல அப்படின்னு சந்தோசப்படுறாங்க..  முத்து அதை மெயின்டன்  பண்ற மாதிரியே பேசுறாரு.. எனக்கு நம்பி நம்பி ஏமாந்து போறதே வேலையா போச்சு ..

Annamalai (13) (1)

விஜயாவின் முகதிரை கிழிந்தது ;

இப்ப சுருதி சொல்றாங்க மீனா அப்படிப்பட்டவங்க இல்ல.. எங்களுக்கு அஞ்சு லட்சம் கடன் ஆச்சு அதை அடைக்க இப்படி பண்ணிட்டா அதனால அம்மாவை மீனா மேல கேஸ் கொடுக்க வேண்டாம்னு சொல்லிருங்க அப்பா அப்படின்னு அண்ணாமலை கிட்ட கேக்குறாரு.. இந்த தப்ப மீனா பண்ணி இருக்கவே மாட்டான்னு நான் சொல்றேன் அப்படின்னு அண்ணாமலை சொல்றாரு. அம்மாதான் பார்வதி அத்தை கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண சொல்லி இருக்காங்க. நான் வேணா உனக்கு பணம் தரப்பா கொஞ்சம் பேசுப்பான்னு சொல்ல அதுக்கு அண்ணாமலை கோவமா அவ தப்பே பண்ணலைன்னு சொல்றேன் நாஏன்   காசு வாங்க போறேன் அப்படின்னு கேக்குறாரு.. சூப்பர் பா.. ஆனா வீட்ல இருக்கவங்க ரெண்டு லட்சம் வாங்கி இருக்காங்க.. இவ்வளவு நேரம் சொன்னது எல்லாமே பொய் தான். அந்த கேடுகெட்ட வேலையை அம்மாதான் செஞ்சிருக்காங்க .

சத்யா கேஸ் வாபஸ் வாங்க அம்மா ரெண்டு லட்சம் வாங்கி இருக்காங்க.. அதை மீனாதான் எடுத்துட்டான்னு  அவ மேல பழி போடுறாங்க ..பாவம்பா மீனா அவ கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லுங்க அப்படின்னு சொல்றாரு . ஸ்ருதியும் ஆமா இந்த விஷயத்துல ஆன்ட்டி மன்னிப்பு கேட்டு தான் ஆகணும் அப்படின்னு சொல்றாங்க.. அண்ணாமலையும் மன்னிப்பு கேட்க சொல்றாரு.. ஆனா விஜயா என்னால எல்லாம் கேட்க முடியாதுன்னு சொல்றாங்க. இப்போ மீனா சொல்றாங்க அதெல்லாம் கேட்க வேண்டாம் அத்தை அப்படின்னு சொல்லிடறாங்க. என்ன பெரிய தியாகியா நீ  அப்படின்னு கேக்குறாங்க இதோட  இன்னைக்கு  எபிசோட முடுச்சுருக்காங்க ..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்