சிறகடிக்க ஆசை சீரியல்- “ஆண்ட்டி நேத்து உங்கள அழ வச்சா இன்னிக்கி விழ வச்சிட்டா” விஜயாவை ஏத்தி விடும் ரோகினி..!
சென்னை ; சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[ஆகஸ்ட் 30] எபிசோடில் மீனா எண்ணையை கீழே கொட்டி விடுகிறார், அதில் விஜயா வழுக்கி விழுகிறார்.. தூக்க சென்ற மனோஜும் விழுந்து விடுகிறார்.
சுருதி குரலை மாத்தி பேசி விஜயாவை பயமுறுத்திட்டு இருக்காங்க.. அப்போ விஜயா வெளியே போ அப்படின்னு உரைத்த குரலில் சத்தமா சொல்றாங்க.. பயந்துட்டே விஜயாவும் வெளியே வராங்க.. இப்ப மனோஜும் வெளியில வந்துட்டாரு இரண்டு பேருமே ரொம்ப பயந்து நடுங்கி போய் நிக்கிறாங்க.. அம்மா இந்த வீட்ல பேய் இருக்கும் போலாமா அப்படின்னு சொல்றாரு ..இதை கேட்ட விஜயா பயத்திலேயே அவர போட்டு அடிக்கிறார் சும்மா இருடா நீ வேற ஏண்டா.. இத பாத்து சுருதி சிரிச்சிட்டு இருக்காங்க. மீனா அந்த போன புடுங்கிட்டு போதும் விடுங்க ஸ்ருதி அப்படின்னு வந்து லைட்டை போட்டுட்டு பயந்து போய் நிக்கிற விஜயாவுக்கு தண்ணி கொண்டு போய் கொடுக்குறாங்க. ஆண்ட்டி உங்களுக்கு தான் பேய்னா பயம் இல்லை அப்படின்னு சொன்னீங்க இப்ப இவ்வளவு பயப்படுறீங்க நாங்க தான் சும்மா விளையாட்டுக்கு பண்ணோம்.
இதைக் கேட்ட மனோஜ் என்ன.. சும்மா விளையாட்டுக்கு பண்ணீங்களா கொஞ்ச நேரத்துல எங்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துருக்கோம் . விஜயா மொறசுட்டு போறாங்க .இப்போ காலையில ஆனது மீனா கிச்சன்ல நின்னுட்டு இருக்காங்க. முத்து சவாரி முடுச்சு வீட்டுக்கு வராரு.. என்னங்க உங்க கண்ணு இவ்ளோ சிகப்பா இருக்குது.. சரி இருங்க நான் உங்களுக்கு எண்ணெய் காய்ச்சி கொண்டு வரேன் அதை தேச்சு குளிச்சா சரியாயிடும்னு போயிடறாங்க.. ரூம்ல ரவிக்கும் ஸ்ருதிக்கு சண்டை நடந்துட்டு இருக்கு ஸ்ருதி ரவிக்கு டீசர்ட் எடுத்து கொடுக்குறாங்க .அது ரவிக்கு பிடிக்கலைன்னு சொல்லிடுறாரு. அதுக்கு ஸ்ருதி கோவிச்சுக்கிட்டு சரி நான் இதை ரிட்டன் பண்ணிட்டு எனக்கு என்ன வேணுமோ அதை வாங்கிக்கிறேன்னு வெளியில வராங்க. அந்த டைம்ல மீனாவும் எண்ணெய் காய்ச்சி எடுத்துட்டு வர்றாங்க.
மீனாவை இடிச்சதும் எண்ணெய் கீழே கொட்டியது. என்னங்க பார்த்து வர மாட்டீங்களா.. அப்படின்னு மீனா கேட்க.. சாரிங்க சாரி சாரி கோவத்துல வந்தனா அதான் கவனிக்கல அப்படின்னு ஸ்ருதி சொல்றாங்க. சரி நான் அதை கிளீன் பண்ணிடுறேன் . இல்லங்க பரவால்ல நீங்க ரூம்குள்ள போங்க நான் துணி வச்சு தொடச்சி எடுத்துடறேன் துணி எடுக்க போயிடறாங்க மீனா . அந்த டைம்ல விஜயா வந்து அதுல வழுக்கி விழுந்துடுறாங்க.. அவங்கள காப்பாத்த வந்த மீனாவும் விழுந்துட்டாங்க.. இப்ப எல்லாருமே வராங்க ..இப்பவும் மீனாவ தான் திட்றாங்க.. ஏண்டி இப்படி பண்ற நேத்து பேய் மாதிரி பயமுறுத்துன இன்னைக்கு இப்படி விழ வச்சுட்ட அப்படின்னு திட்றாங்க.. உடனே ஸ்ருதி சொல்றாங்க ஆண்ட்டி இதுக்கு நான் தான் காரணம் தெரியாம எண்ணையை தட்டி விட்டுட்டேன் அவங்களை ஏன் திட்றீங்க அப்படின்னு கேக்குறாங்க .
இதுக்கு முத்து பல குரலு .. அம்மாவுக்கு மீனாவை திட்ட ஏதாவது ஒரு காரணம் வேணும் அப்படின்னு சொல்றாரு. இப்ப மனோஜ் விஜயா தூக்க போறாங்க அவரும் விஜயாவ கீழ போட்டு அவருமே கீழ விழுந்துறாரு.. இப்ப முத்து சொல்றாரு இவனால தான் உங்களுக்கு ஆபத்துன்னு இந்த இயற்கையை சொல்லுது. உடனே ஒரு செகண்ட் எல்லாருமே யோசிக்கிறாங்க ..இப்போ ரெண்டு பேரையுமே எல்லாரும் சேர்ந்து தூக்கி விடுறாங்க. விஜயாவுக்கு ரோகிணி மருந்து எடுத்துட்டு வர்றாங்க ..அப்பவும் மீனாவ திட்டுறாங்க.. உடனே ஸ்ருதி வந்து ஆண்ட்டி உங்களுக்கு நான் சொன்னது புரியலையா என் மேல தான் தப்பு மீனா மேல இல்ல மறுபடியும் சண்டை போடுற மாதிரி கத்திட்டு போறாங்க.
இத பார்த்த விஜயா அந்த மீனா ஸ்ருதி கிட்ட என்னென்னமோ சொல்லி அவளை எப்படி மாத்தி வச்சிருக்கான்னு பாரு அப்படின்னு சொல்றாங்க.. ரோகிணி அதுக்கு தகுந்த மாதிரி ஏத்தி விடுறாங்க.. ஆண்டி நேத்து உங்கள அழ வச்சாங்க.. இன்னைக்கு விழ வச்சுட்டாங்க .. இதுக்கு ஒரு வழி பண்ணுறேன் அப்படின்னு விஜயா யோசிக்கிறாங்க..