பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் இன்று இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படம் “சாம்ராட் பிருத்விராஜ்”. மன்னர் சாம்ராட் பிருத்விராஜின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சந்திரபிரகாஷ் திவேதி இயக்கியுள்ளார்.
unknown nodeஇந்த திரைப்படத்தில் படத்தில் சஞ்சய் தத், அசுவதோஷ் ராணா, லலித் திவாரி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த நிலையில், இன்று இந்தியாவில் வெளியான இந்த படம் ஓமன் மற்றும் குவைத்தில் வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அக்ஷய் குமாரின் ரசிகர்கள் தற்போது அதிர்ச்சியில் உள்ளனர்.
unknown nodeஇதற்கிடையில், கத்தாரில் இந்த படத்தின் வெளியீட்டை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பாஜக ஆளும் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தான் இந்தப் படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதை போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ” தி காஷ்மீர் ஃபைல்ஸ்” படத்துக்கு வரிவிலக்கு கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.