நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் தனி விமானம் மூலம் ஐக்கிய அமீரகம் சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு அதிபர் சிறப்பான வரவேற்ப்பை கொடுத்து, ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், இருநாட்டு தலைவர்கள் சந்திப்பின்போது பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. இதன்பின், அபுதாபியில் ‘அஹ்லன்’ மோடி என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, இந்தியாவிற்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கும் இடையிலான உறவுகள் குறித்து பேசிய […]
இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேரை கத்தார் நீதிமன்றம் விடுதலை செய்தது. கத்தார் நாட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் பணியாற்றி வந்தனர். அப்போது, இந்தியாவை சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரிகள் 8 பேரும் கத்தாரின் நீர்மூழ்கி கப்பல் குறித்த தகவல்களை இஸ்ரேல் நாட்டுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த 2022ம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த 8 முன்னாள் கடற்படை அதிகாரிகளையும் அந்த நாட்டு அரசு […]
கத்தாரில் கைது செய்யப்பட்டு, காவலில் இருந்து வந்த 8 இந்தியர்கள் வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதாவது, இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக கூறப்படும் புகாரில் கைதான 8 இந்தியர்களுக்கு மரண தண்டனையை கத்தார் நீதிமன்றம் விதித்து உத்தரவிட்டது. உளவு பார்த்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ள 8 இந்தியர்களும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 8 […]
மலையாள நடிகர் மம்முட்டி மற்றும் நடிகை ஜோதிகா நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, ‘காதல் – தி கோர்’ என்ற திரைப்படம் நாளை மறுநாள் (நவம்பர் 23 ஆம் தேதி) திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது. இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளான குவைத் மற்றும் கத்தார் அரசாங்கங்களால் இந்த படத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. சமீபகாலமாக, இந்த இரு நாடுகளிலும் பல இந்திய திரைப்படத்தின் கதைக்களம், அவர்களின் கருத்தியல்களுக்கு பொருந்தாத காரணத்தால் தடை செய்யப்பட்டு வருகின்றனர். அந்த […]
கத்தாரில் உள்ள ‘தஹ்ராகுளோபல் டெக்னாலஜிஸ் அண்ட் கன்சல்டென்சி சர்வீசஸ்’ என்ற நிறுவனத்தில், இந்திய கடற்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 8 அதிகாரிகள் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில், கடந்த வருடம், கத்தார் அரசு இந்திய கடற்படையில் உயர்பொறுப்பு வகித்து ஓய்வு பெற்ற 8 முன்னாள் அதிகாரிகளை இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில், கைது செய்து சிறையில் அடைத்தது. இதனையடுத்து, இந்த 8 அதிகாரிகளுக்கும் கத்தார் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது. தெரு நாய்க்கு நெதர்லாந்து பெண் […]
கத்தாரில் கைது செய்யப்பட்டு, காவலில் உள்ள 8 இந்தியர்கள் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு உளவு பார்த்த புகாரில் கைதான 8 இந்தியர்களுக்கு மரண தண்டனையை கத்தார் நீதிமன்றம் விதித்துள்ளது. 8 இந்தியர்களும் பணி புரிந்த நிறுவனம் நீர்முழ்கி கப்பல்கள் தொடர்பான திட்டத்தில் இணைந்திருந்தது. உளவு பார்த்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ள 8 இந்தியர்களும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சமயத்தில், […]
ஒசாமா பின்லேடன் தனது வளர்ப்பு நாய்களை ரசாயன ஆயுத சோதனைக்காக பயன்படுத்தினார் என பின்லேடனின் மகன் கூறியுள்ளார். உலக நாடுகளை அதிர வைத்த பயங்கரவாதி என்றால் அது அல்கொய்தா தலைவராக இருந்த மறைந்த ஒசாமா பின்லேடன் தான். அதுவும் அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக அவன் இருந்தான் என்றே கூற வேண்டும். பயங்கரவாதி பின்லேடனை அமெரிக்க ராணுவம் கடந்த 2011 மே மாதம் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தவனை சுட்டு கொன்றது. பின்லேடன் மகன்களின் ஒருவரான உமர் பின்லேடன் அண்மையில் […]
ஃபிஃபா உலகக்கோப்பையின் போர்ச்சுகல்-உருகுவே போட்டியில் வானவில் கொடியுடன் மைதானத்தில் நுழைந்த நபரால் பரபரப்பு. கத்தாரில் நடந்துவரும் ஃபிஃபா 2022 கால்பந்து உலகக்கோப்பையில் போர்ச்சுகல் மற்றும் உருகுவே அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ஒரு போராட்டக்காரர், நீல நிற சூப்பர்மேன் டி-ஷர்ட்டை அணிந்து கொண்டு அதன் முன்புறம் உக்ரைனைக் காப்பாற்றுங்கள் என்றும், பின்புறம் ஈரானியப் பெண்ணுக்கு மரியாதை என்றும் எழுதி, வானவில் கொடி ஏந்தி மைதானத்தின் நடுவே ஓடினார். ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் கிட்டத்தட்ட 30 வினாடி மைதானத்தில் […]
ஃபிஃபா உலகக்கோப்பையில் இன்று வாழ்வா? சாவா? போட்டியில் அர்ஜென்டினா, மெக்ஸிகோவை சந்திக்கிறது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் குரூப்-C வில் இடம்பெற்றுள்ள மெஸ்ஸியின் அர்ஜென்டினா மற்றும் மெக்ஸிகோ அணிகள் லுஸைல் ஸ்டேடியத்தில் விளையாடுகின்றன. அர்ஜென்டினா தனது முதல் போட்டியில் சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது. மெக்ஸிகோ அணி தனது முதல் போட்டியில் போலந்து அணியை சந்தித்தது. இதில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் ஆட்டம் சமனில் முடிந்தது. இதனால் […]
கத்தாரில் நேற்று தொடங்கிய ஃபிஃபா உலகக் கோப்பை ஆட்டத்தில், 92 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தொடரை நடத்தும் கத்தார் அணி தோல்வி. உலகெங்கும் அதிக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் நேற்று கத்தாரில் கோலாகலமாக தொடங்கியது. இதில் தொடக்க நாளான நேற்று முதல் போட்டியில் குரூப் A விலிருந்து உலகக்கோப்பை தொடரை நடத்தும் அணியான கத்தார் மற்றும் ஈக்குவடார் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஈக்குவடார் அணி, கத்தாரை 2-0 என்ற கோல் கணக்கில் […]
கத்தாரில் நடைபெறும் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை 2022 தொடரின் போது மைதானங்களில் மது விற்பனைக்கு தடை. கத்தாரில் இன்னும் இரு தினங்களில் ஃபிஃபா 2022 கால்பந்து உலகக் கோப்பை திருவிழா தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில் போட்டி நடைபெறும் எட்டு மைதானங்களில் பீர் போன்ற மதுபானம் விற்க கத்தார் அரசு தடை விதித்துள்ளது. ஆரம்பத்தில், ஃபிஃபா(FIFA) ஸ்பான்சர், பட்வைசர் மட்டுமே கத்தார் உலகக் கோப்பை அதிகாரப்பூர்வ மைதானங்களில் விற்க அனுமதிக்கப்பட்ட ஒரே பீர் ஆகும். பட்வைசர் 1986 […]
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் இன்று இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படம் “சாம்ராட் பிருத்விராஜ்”. மன்னர் சாம்ராட் பிருத்விராஜின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சந்திரபிரகாஷ் திவேதி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் படத்தில் சஞ்சய் தத், அசுவதோஷ் ராணா, லலித் திவாரி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த நிலையில், இன்று இந்தியாவில் வெளியான இந்த படம் ஓமன் மற்றும் குவைத்தில் […]
கொரோனா சிகிச்சைக்காக கத்தார் நாட்டில் இருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வந்து சேர்ந்ததுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தற்போது கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்கள் ஒருபுறமிருக்க, மருத்துவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் மருந்து பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. எனவே இந்தியாவிற்கு மற்ற பிற நாடுகளும் உதவிக்கரம் […]
சென்னையில் இருந்து கத்தாருக்கு கடத்த சென்ற ரூ.5 கோடி மதிப்புள்ள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஏர் கார்கோ சரக்கு முனையத்தில் இருந்து கத்தார் நாட்டு செல்லும் சரக்கு விமானத்தில் பெரும் அளவில் போதை மருந்துகள் கடத்தப்படுவதாக சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, கத்தார் செல்லும் சரக்குகளை ஆய்வு செய்தனர். அப்போது, பார்சல்களில் டிஜிட்டல் எடை எந்திரங்கள் இருப்பதாக தெரிந்தது. […]
கத்தாரில் 2022 ஆம் ஆண்டில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், போட்டிகள் நடைபெறும் மைதானத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பார்வையிட்டார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக கத்தார்க்கு கடந்த 27 ஆம் தேதி சென்றார். கத்தார் சென்ற அவர், இருநாட்டு உறவுகள் குறித்து பேசினார். பின்னர், 2022 ஆம் ஆண்டில் பிஃபா கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானமான “அகமது பின் அலி” மைதானத்தை பார்வையிட்டார். இதுகுறித்து அவரின் ட்விட்டர் பதிவில் […]