பிரமாண்டத்தையே பிரமிக்க வைத்த லேடி சூப்பர் ஸ்டார்

Default Image

லேடி சூப்பர் ஸ்டார்‘ இந்த பட்டத்திற்கு சற்றும் குறைவைக்காமல் தான் தேர்வு செய்யும் கதைக்களத்தின் மூலமும், கதாபாத்திரத்தின் மூலமும் அந்த பட்டத்திற்கு வலு சேர்த்து வருபவர் நயன்தாரா. இவர் சோலோ ஹீரோயினாக நடித்தாலும் சரி, ஹீரோயினாக நடித்தாலும் சரி இவரின் கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறது.
நயன்தாரா நடிப்பில் சென்ற வாரம் ரிலீசான ‘கோலமாவு கோகிலா‘ படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. இப்படம் தமிழ் சினிமா தாண்டி பாலிவுட் இயக்குனர் வரை இப்படத்தை பார்க்கும் ஆவலை தூண்டி இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தினை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் பார்த்துவிட்டு படகுழுவை வெகுவாக பாராட்டி உள்ளார். இப்படத்தில் நயன்தாரா நடிப்பு நன்றாக இருந்ததாகவும், அனிருத் இசை மிகவும் பிடித்திருந்ததாகவும், இப்படம் ‘குடும்ப கிரைம் டிராமா ‘ என குறிப்பிட்டு படத்தை டிவிட்டரில் பாராட்டி உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு  தினசுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்