Aishwarya Shankar:பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை அதிதி ஷங்கரும் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமணம் கோலாகலமாக நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, நேற்று (15-04-2024, திங்கட்கிழமை) மாலை, கிழக்கு கடற்கறை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட ரன்வீர் சிங் மற்றும் அட்லீ ஆகியோர் கில்லி படத்தில் வரும் அப்படி போடு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
unknown nodeஅவர்களுடம், நடிகை அதிதி ஷங்கரும் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், நடிகர் சிவகார்த்திகேயன், மோகன்லால், ரன்வீர் சிங், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேற்று நடைபெற்ற திருமண விழாவில், ரஜினி, கமல், சூர்யா, கார்த்தி, விக்ரம், விஷால், அர்ஜுன், பாரதிராஜா, மணிரத்னம், விக்னேஷ் சிவன், நயன்தாரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
