அழகான, அர்த்தமுள்ள, இனிமையான காதல் திரைப்படம்! – இயக்குனர் ஷங்கர் பாராட்டிய 'தயாரிப்பாளர்' சூர்யா திரைப்படம்!

சமுத்திரக்கனி, சுனைனா, மணிகண்டன், நிவேதிதா என பலர் நடித்து சென்ற வாரம் ரிலீசான திரைப்படம் சில்லு கருப்பட்டி. இந்த படத்தை ஹலிதா ஷமீம் என்பவர் இயக்கி இருந்தார்.

சூர்யாவின் 2டி பட நிறுவனம் சார்பாக அண்மையில் வெளியான திரைப்படம் சில்லு கருப்பட்டி.

இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் பார்த்து  தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

சமுத்திரக்கனி, சுனைனா, மணிகண்டன், நிவேதிதா என பலர் நடித்து சென்ற வாரம் ரிலீசான திரைப்படம் சில்லு கருப்பட்டி. இந்த படத்தை ஹலிதா ஷமீம் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படத்தை சூர்யாவின் 2டி பட நிறுவனம் வாங்கி வெளியிட்டிருந்தது. இந்த படம் வெவ்வேறு மனிதர்களின் வாழ்வியலை ஒரே புள்ளியில்  சந்திக்க வைக்கும் கதைக்களத்தை கொண்டது.

இந்த படம் பார்த்தவர்களின் பாராட்டை பெற்று வருகிறது. இந்த படத்தை தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார்.  அவர் பதிவிட்ட டிவிட்டர் பதிவில் சில்லு கருப்பட்டி படம் அழகான, அர்த்தமுள்ள, உணர்ச்சிமிக்க, காதல் படம், புதுமையான கதைக்களம்,’ என பதிவிட்டுள்ளார். மேலும் படத்தில் உள்ள நல்ல காட்சிகளையும் சிலாகித்துள்ளார். பிரமாண்ட இயக்குனரின் இந்த பாராட்டு பதிவால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

unknown node