ஜிவி பிரகாஷ் நடித்துள்ள செல்ஃபி படத்தை படக்குழுவினர் மூலம் பார்த்த கலைப்புலி எஸ்.தாணு, கண்டிப்பாக இந்த படம் வெற்றியடையும் என அவரே இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளார்.
ஜிவி.பிரகாஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக அரை டஜன் படங்கள் காத்துக்கிடக்கின்றன. இந்த வாரம் (இன்று) ஜிவி நடித்த பேச்சிலர் திரைப்படம் வெளியாகியுள்ளது. படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு தமிழ்நாட்டு பேச்சிலர்ஸ் வைத்துள்ளனர். அது படத்தின் முதல் காட்சிக்கு வந்த கூட்டத்திலேயே தெரிகிறது.
unknown nodeஅடுத்த வாரம் ஜிவி நடிப்பில் ஜெயில் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இந்த திரைப்படத்தை வசந்தபாலன் இயக்கியுள்ளார். வசந்தபாலனின் இன்னொரு அங்காடி தெரு போல படம் இருக்கும் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.
unknown nodeஅதற்கடுத்து அவர் நடிப்பில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் செல்ஃபி. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கியுள்ளார். ஜி.வி ஹீரோவாக நடிக்க இயக்குனர் கெளதம் மேனன் வில்லனாக மிரட்டியுள்ளார். படத்தின் ட்ரைலரில் அது வெளிப்பட்டது. ட்ரைலர் காட்சிகள் அனைத்தும் புதுசாகவும், அழுத்தமாகவும், எந்தவித சமரசமும் இல்லாத காட்சிகளாக இருந்தது.
இந்த படத்தை படக்குழுவினர் மூலம் பார்த்த கலைப்புலி எஸ்.தாணு வியந்துவிட்டார். கண்டிப்பாக இந்த படம் வெற்றியடையும் என அவரே இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளார். அவரே தமிழகம் முழுக்க விநியோகம் செய்ய உள்ளார்.