என்னிடம் கேட்காதீர்கள்! யுவன் ஷங்கர் ராஜாவிடமும், இயக்குனர் லிங்குசாமியிடமும் கேளுங்கள்! டிவிட்டரில் காட்டமாக பதிலளித்த இயக்குனர்!

— Seenu Ramasamy (@seenuramasamy) October 22, 2019

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை போன்ற நல்ல படங்களை இயக்கிய சீனு ராமசாமி இயக்கத்தில் தயாரான திரைப்படங்கள் தான், இடம் பொருள் ஏவல், மாமனிதன், இதில் இடம் பொருள் ஏவல் படத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் என முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இயக்குனர் லிங்குசாமி தயாரித்து இருந்தார்.

unknown node

அதேபோல, மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து இருந்தார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து இருந்தார். இந்த இரு படங்களும் வெளியாக வில்லை. ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக இயக்குனர் சீனு ராமசாமியிடம் கேட்டபோது, அவர் இந்த இரு படங்களை இயக்கியது மட்டும் தான் என் வேலை. அதனை முடித்துவிட்டேன். ரிலீஸ் எப்போது என தயாரிப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் இயக்குனர் லிங்குசாமியிடம் கேளுங்கள் என டிவிட்டரில் தனது பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

unknown node