சர்கார் டீசர் வெளியான 10 நிமிடத்தில் ஒரு மில்லியன் பேர் பார்த்து ரசித்து உள்ளனர்.இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜயின் அசத்தலான நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் படம் சர்கார் .இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
அந்த விழாவில் நடிகர் விஜய் பேசியது பல விமர்சனகளுக்குள்ளானது.மேலும் இயக்குனர் முருகதாஸ் பேசும்போது சர்கார் படத்தின் டீசர் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார்.அதன்படி வரும் 19ம் தேதி அதாவது இன்று ஆயுதபூஜையை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
unknown nodeஇன்று டீசர் வெளியாகியுள்ளது.இதை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டது.
சர்கார் டீசரில் விஜய்யின் வசனங்கள் பட்டைய கிளப்பியுள்ளது .குறிப்பாக ”ஐ ஆம் எ கார்ப்பரேட் கிரிமினல்..உங்க ஊர் தலைவனை தேடி பிடிங்க இது தான் நம்ம சர்கார்ர்ர் …என்ற வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது . இதனால் தளபதி விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கினார்கள்.
unknown nodeஇதன் எதிரொலியாக சர்கார் டீசர் வெளியான 10 நிமிடத்தில் ஒரு மில்லியன் பேர் பார்த்து ரசித்து உள்ளனர்.இதனை பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
unknown node