நடிகர் விஜய்-நடிகை கீர்த்தி சுரேஷ்-AR முருகதாஸ் இணைந்து உருவாகும் படம் சர்கார் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தனியார் கல்லூரி ஒன்றில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
unknown nodeநடிகர் விஜய் – முருகதாஸ் கூட்டணியில் கத்தி, துப்பாக்கி படங்களைத் தொடர்ந்து உருவாகியுள்ள படம் சர்கார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் அனைத்துப் பாடல்களையும் ஆளப்போறான் தமிழன் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.
unknown nodeஇந்த படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2-ம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாகவும், அதில் 250 விஜய் ரசிகர்களுக்கு வாய்ப்பளிக்க இருப்பதாகவும் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
unknown nodeஇதைத்தொடர்ந்து சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கு நடைபெறும் இடம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பாடல் வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
DINASUVADU