சிலம்பாட்டம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சனாகான். மேலும் இவர் ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.ஹிந்தியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவந்தார்.
இந்நிலையில் அவர் நடன இயக்குநர் மெல்வின் லூயிஸை காதலிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அதற்கு மவுனமாக இருந்த சனாகான். மெர்வின் லூயிஸின் பிறந்தநாளன்று அவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தனது காதலை உறுதி செய்தார்.
மேலும் தனது இன்ஸ்டாகிராமில் சனாகான், “உன்னைச் சந்திக்கும் வரை யாரையும் என்னால் இவ்வளவு நேசிக்க முடியும் என்பது எனக்கே தெரியாது. ஒரு சிலர் வாழ்நாள் முழுவதும் தேடும் ஒன்றை நான் உன்னிடத்தில் கண்டேன்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் நான் உனக்காக உருகுகிறேன். எப்போதும் உன்னைக் காதலிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
unknown nodeunknown nodeunknown node