ஆர்.ஜே.பாலாஜியின் “சிங்கப்பூர் சலூன்”..! ரோலக்ஸாக களமிறங்கும் லோகேஷ் கனகராஜ்.?

Default Image

இயக்குனரும், நடிகருமான ஆர். ஜே. பாலாஜி கடைசியாக வீட்ல விசேஷம் படத்தை அவரே இயக்கி அவரே நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஆர். ஜே. பாலாஜி  நடிக்கவுள்ள படத்திற்கான அறிவிப்பு பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது.

RjBalajisNext
RjBalajisNext [Image Source: Google ]

நேற்றே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை லோகேஷ் கனகராஜ் இன்று  நடைபெறும் இந்தியா vs இங்கிலாந்து கிரிக்கெட் போட்டியின் நடுவில் வெளியிடுவார் என்று வேல்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. ஏனெனில் ஆர்.ஜே.பாலாஜியும் அந்த கிரிக்கெட் போட்டியை தொகுத்து வழங்கி வருகிறார்.

SingaporeSaloon
SingaporeSaloon [Image Source: Google ]

இந்த நிலையில், நேற்று தற்போது அறிவிக்கப்பட்டது போல ஆர்.ஜே.பாலாஜி நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு “சிங்கப்பூர் சலூன்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் கோகுல் இயக்குகிறார்.

lokesh kanagaraj
lokesh kanagaraj [Image Source: Google ]

கையில் மூடி வெட்டும் பொருட்களுடன் வித்தியாசமான லுக்கில் ஆர்.ஜே.பாலாஜி இருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. மேலும் மற்றோரு தகவல் என்னவென்றால், இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை போல கெத்தான கேமியோ ரோலில் வரவிருக்கிறாராம். இதற்கு முன்பு கடைசியாக மாஸ்டர் படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் 1 நிமிடம் மற்றும் லோகேஷ் கனகராஜ் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்