சென்னையில் ஸ்ரீதேவி மறைவைத் தொடர்ந்து 16ம் நாள் நினைவஞ்சலி!அஜித், சூர்யா,கார்த்தி கலந்து கொண்டனர்…..
சென்னையில் நடிகை ஸ்ரீதேவி மறைவைத் தொடர்ந்து 16ம் நாள் நினைவஞ்சலி நிகழ்ச்சி உள்ள அவரது வீட்டில் நடைபெற்றது.
ஸ்ரீதேவியின் அஸ்தி ராமேஸ்வரத்தில் கரைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள வீட்டில் குடும்ப வழக்கப்படி நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் பங்கேற்றார்.
நடிகர்கள் சூர்யா, கார்த்திக், விஜயகுமார் மற்றும் நடிகைகள் லதா , ஸ்ரீபிரியா, மீனா, பாடகி பி.சுசீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.