விடுதலை 2 :இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி நடிக்கும் விடுதலை 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 11.30 மணிக்கு வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்திருந்தனர். அதன்படி, தற்பொழுது போஸ்டர்கள் கவனம் ஈர்க்கும் வகையில் வெளியாகி இருக்கிறது.
unknown nodeமொத்தம் இரண்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ளது, அதில் ஒன்றில் மஞ்சு வாரியருடன் காதல் வயப்பட்டு இருக்கிறார். மற்றொன்றில் அசுர லுக்கில் அருவாள் கையுடன் பயங்கரமாக இருக்கிறார்.
விடுதலை 2ம் பாகத்தின் கதையானது அதன் முதல் பாகத்தில் முன்னோடி முடிந்த இடத்திலிருந்து தொடங்கும். விஜய் சேதுபதியின் கதாபாத்திரமான பெருமாள் வாத்தியார் எப்படி மக்கள் படை தலைவரானார் என்பதை பற்றி அமைக்கப்பட்டிருக்கும்.
எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையின் இரண்டு பகுதியை தழுவி எடுக்கப்பட்ட விடுதலை இரண்டாம் பாகத்தில், நடிகர் சூரியை தவிர, விஜய் சேதுபதி, சேத்தன், பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு, பாலாஜி சக்திவேல், சரவண சுப்பையா மற்றும் மூணார் ரமேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.
இரண்டாம் பாகத்திற்கான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இசையமைப்பாளர் இளையராஜா இசையில், கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி மற்றும் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ராமர் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
