ரெடின் கிங்ஸ்லி மனைவியின் கழுத்தில் 2 தாலி.! வெளியான சுவாரஸ்ய தகவல்…

RedinKingsley - Sangeetha

நடிகர் ரெடின் கிங்ஸ்லி கடந்த சில ஆண்டுகளாக  சீரியல் நடிகை சங்கீதா என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் மைசூரில் உள்ள கோயில் ஒன்றில் எளிமையான முறையில் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு, நடிகை சங்கீதா 2 தாலிகளை கழுத்தில் கட்டியபடி இருக்கிறார். இதனால்,  இதுகுறித்த கேள்விக்கு அவர் பதில் அளித்திருக்கிறார்.

அதாவது, நடிகர் ரெடின் கிங்க்ஸ்லி கிறிஸ்தவர் என்பதால் கிறிஸ்தவ முறைப்படி சர்ச்சில் தாலி கட்டியதாகவும், சங்கீதாவின் இந்து முறைப்படி கோயிலில் ஒருமுறை திருமணமும் நடைபெற்றிருக்கிறது. ஆகையால் 2 தாலிகள் காத்திருப்பதாக விளக்கம் அளித்துள்ளார்.

ஜாலியாக ஹனிமூனை கொண்டாடும் ரெடின் கிங்ஸ்லி -சங்கீதா ஜோடி!

தற்போது, திருமணம் முடிந்த கையோடு நடிகர் ரெடின் கிங்ஸ்லி தன்னுடைய மனைவி சங்கீதாவுடன் ஹனிமூனை கொண்டாட கிளம்பியுள்ளார்.  தனது அன்பு மனைவியுடன் ஹனிமூனை கொண்டாடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா

கோலமாவு கோகிலா படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகர் ரெடின் கிங்ஸ்லி. அதில் தனது நடிப்பின் மூலம் தனக்கென்று ஒரு உடல் பாவனையை வெளிப்படுத்தி மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார்.

இதனையடுத்து, பீஸ்ட், ஜெயிலர் என பல்வேரு படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிராபி. ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்திருக்கும் நடிகை சங்கீதா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியலில் நடித்து வருவதன் மூலம் பிரபலமானவர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்