2.0 படத்தின் டிரைலர் நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகிறது ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அகபஷய்குமாரும் நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட முடியவில்லை. கிராபிக்ஸ் வேலைகள் திட்டமிட்டபடி நடந்து கொண்டு இருக்கிறது.
unknown nodeகடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி ரஜினி நடித்த 2.0 திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்நிலையில் 2.0 படத்தின் டிரைலர் நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.