அதிக சம்பளம் கேட்டு கங்குவா படத்தின் வாய்ப்பை இழந்த பாகுபலி நடிகர்?

kanguva suriya

தமிழ் சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமாவே ஆவலுடன் காத்திருக்கும் திரைப்படம் என்றால் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து  வரும் கங்குவா திரைப்படம் தான். இந்த திரைப்படத்தினை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடித்து வருகிறார்.

படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக பாபி தியோல் நடித்து வருகிறார். முதலில் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் ராணாவை தான் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்ததாம். படத்திற்கான கதையை எல்லாம் கூறிவிட்டு சம்பள விஷயம் வரும்போது படத்தில் நடிக்க தனக்கு 18 கோடி வேண்டும் என அதிக சம்பளம் கேட்டாராம்.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு திருமணம்? பொண்ணு யாரு தெரியுமா?

அவர் சம்பளம் அதிகமாக கேட்கும் காரணத்தால் படக்குழு பாபி தியோல் இந்த படத்தில் சரியாக இருப்பார் என கேட்டு அவரிடம் கதையை கூறினார்களாம். பிறகு ராணாவை விட கம்மியாக அவர் சம்பளம் கேட்ட காரணத்தால் அவரை விட இவர் குறைவான சம்பளம் தான் கேட்கிறார். இவரை ஒப்பந்தம் செய்யலாம் என அவரை ஒப்பந்தம் செய்துவிட்டதாம். இந்த தகவலை சினிமா யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சூர்யாவுக்கு கங்குவா படத்தின் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டது. அப்போது தோள்பட்டையில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் ஓய்வு எடுத்து வரும் நிலையில், தற்போது படத்தில் வில்லனாக நடிக்கும் பாபி தியோல் உடைய காட்சிகளை படக்குழு படமாக்கி வருகிறதாம். சீனா பகுதியில் இருக்கும் பாறைகள் நிறைந்த ஒரு பகுதியில் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், கங்குவா படம் விறு விறுப்பாக பிரமாண்ட காட்சிகளுடன் தயாராகி வரும் நிலையில், படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்