ரஜினி எடப்பாடி சந்திப்பு....கூட்டணி அழைப்பு அல்ல , திருமண அழைப்பு....!!

தமிழக திரையில் 50ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.தமிழக மக்கள் மற்றும் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அழகிக்கப்படுபவர் ரஜினி.இந்த

தமிழக திரையில் 50ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.தமிழக மக்கள் மற்றும் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அழகிக்கப்படுபவர் ரஜினி.இந்த பொங்கலுக்கு வெளியான அவரின் பேட்ட படம் திரையரங்கில் நல்ல வசூல் சாதனை செய்து வருகின்றது.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவின் திருமண விழாவிற்க்கான திருணம் அழைப்பிதழை நடிகர் ரஜினி அனைத்து முக்கிய பிரபலங்கள் , அரசியல் தலைவர்கள் என பலருக்கும் கொடுத்து வருகின்றார்.இந்நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.

சென்னை_யின் பசுமை வழி சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்திற்கு இன்று அதிகாலை வந்த நடிகர் ரஜினிகாந்த் அவரது மகள் சௌந்தர்யாவின் திருமண விழாவிற்க்கு அழைப்பிதழை வழங்கினார். அதனை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெற்றுக்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் திருமணத்துக்கு வருவதாக முதலமைச்சர் வருவதாக குறிப்பிட்டார்.