ரஜினி, அஜித், விஜய் வாழ்த்து – இசையமைப்பாளர் டி.இமான் நெகிழ்ச்சி..!!

Rajini, Ajith and Vijay congratulate Diman on receiving the national award

தேசிய விருது பெற்ற டி.இமானுக்கு ரஜினி, அஜித், விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான “விஸ்வாசம்” படத்தின் இசையமைப்பாளர் டி. இமான்க்கு தேசிய விருது நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இசையமைப்பாளர் இமானுக்கு பல தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் அவரை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, விஜய், அஜித் தன்னை பாராட்டியுள்ளதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் “தேசிய விருது வென்றதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி சார் போன் செய்து வாழ்த்தினார். விஜய் அண்ணன், அஜித் சார், ஆகியோரது வாழ்த்தையும் தாழ்மையாக ஏற்றுக்கொள்கிறேன். விஜய்யின் தமிழன் படத்தில் எனது இசைப்பயணம் தொடங்கியது. விஸ்வாசம் படத்திற்காக கிடைத்த விருது அவர் வாழ்த்தியது மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.

unknown node