“சாரே கொல மாஸ்” சொல்லி அடித்த புஷ்பா 2.! மிரள வைக்கும் டிவிட்டர் விமர்சனம்!

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

Pushpa 2 Twitter Review

சென்னை : புஷ்பா 2 படம் முதல் பாகம் அளவுக்கு இருக்குமா? என மக்கள் எதிர்பார்த்த நிலையில், முதல் பாகம் என்ன? அதைவிட பயங்கரமாகவே எடுத்து தருகிறோம் என்கிற வகையில் இயக்குநர் சுகுமார் தரமான படத்தினை கொடுத்திருக்கிறார். படத்தை பார்த்துவிட்டு மக்கள் கூறிய விமர்சனங்களை வைத்து பார்க்கையில் பெரிய அளவில் எதிர்மறையான விமர்சனங்கள் கண்களில் சிக்கவில்லை.

அந்த அளவுக்கு பிசிறு தட்டாமல் முதல் பாகத்தை எந்த அளவுக்கு அனைவருக்கும் பார்த்து ரசித்தார்களோ அதே போலவே ரசித்து வருகிறார்கள். இந்நிலையில், படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் ட்வீட்டரில் தெரிவித்துள்ள விமர்சனத்தை பற்றி பார்க்கலாம்.

படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன் ஒருவர் ”  அல்லு அர்ஜுன் சூப்பர், என்ன ஒரு அற்புதமான ஸ்க்ரீன் பிரசன்ஸ். பஹத் பாசில் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோருடைய கதாபாத்திரமும் அருமையாக இருக்கிறது. மற்ற கதாபாத்திரங்கள் வலுவாக இல்லை. பின்னணி இசை நன்றாக படத்தை ஆதரிக்கிறது. அறிமுகம், இண்டர்வெல் பிளாக், கிஸ்ஸிக் அருமை.சில காட்சிகள் சரியாக இல்லை என்றால் கூட இது நியாயமான பொழுதுபோக்குக்கு திரைப்படம்” என கூறியுள்ளார்.

மற்றொருவர் “புஷ்பா 2 முழுவதும் அல்லு அர்ஜுன் மாஸ் காட்சிகள் தான். இண்டர்வெல் பிளாக், ஜாதரா காட்சி & க்ளைமாக்ஸ் ஆக்‌ஷன் பிளாக் ஆகியவை புல்லரிக்க வைத்தது. முக்கிய காட்சிகளில் ஃபஹத்பாசில் & ராஷ்மிகாவுக்கு நல்ல ஸ்கோப் உள்ளது. முதல் மற்றும் இரண்டாம் பாதி மனதில் சில இடங்களில் நீளம் அதிகமாக இருப்பது தெரிய வந்தது. இயக்குனர் சுகுமார் கமர்ஷியல் அம்சங்களுடன் சிறப்பாக இயக்கியுள்ளார்” என கூறியுள்ளார்.

 

மற்றொருவர் ” நேர்மையான விமர்சனம், புஷ்பா 2 ( பக்கா கமர்ஷியல் திரைப்படம் ) படத்திற்கு  பிளஸ்: அல்லு அர்ஜுன் நடிப்பு , ஃபாஃபா, மற்றும் பிஜிஎம் சிறப்பாக உள்ளது. மொத்தத்தில் நல்ல ஒரு பொழுது போக்கான திரைப்படம்” எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested