கிராமத்து இளைஞனாக களமிறங்கும் பிரேம் ஜி! இயக்குனர் யார் தெரியுமா?!

இசையமைப்பாளர் இயக்குனர் கங்கை அமரனின் மகனும், இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பியுமான நடிகர் இசையமைப்பாளருமான பிரேம் ஜி அமரன். படங்களில் அதிகமாக தற்போது

நடிகர் இசையமைப்பாளர் பிரேம் ஜி தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான படங்களில் மட்டுமே பெரும்பாலும் நடித்து வந்தார்.

இவர் தற்போது கிராமத்து பின்னணியில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். இப்பட ஷூட்டிங் அருப்புக்கோட்டையில் நடைபெற உள்ளது.

இசையமைப்பாளர் இயக்குனர் கங்கை அமரனின் மகனும், இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பியுமான நடிகர் இசையமைப்பாளருமான பிரேம் ஜி அமரன். படங்களில் அதிகமாக தற்போது நடிப்பதில்லை. வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

தற்போது முதல் முறையாக முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகும் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தை சுரேஷ் தங்கையா இயக்க உள்ளார். இவர் விதார்த் நடித்த ஒரு கிடாரியின் கருணை மனு படத்தை இயக்கி நல்ல இயக்குனர் என பெயரெடுத்தவர்.

unknown node

பிரேம் ஜி நாயகனாக நடிக்கும் படம் முழுக்க அருப்புகோட்டையில் நடைபெறும் படி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தில் 80 வயது பாட்டி ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்பட ஷூட்டிங்கை 30 நாளில் முடித்து விட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ஆண்டனி தாசன் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளாராம். விரைவில் இப்படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.