தளபதி 64 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை! காரணம் இதுதான்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். தற்போது இவர், இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். தற்போது இவர், இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64-வந்து படத்தில் நடிக்கவுள்ளார்.

unknown node

இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆக்டொபர் மாதம் முதல் துவங்கவுள்ளது. இப்படத்தில் நடிகை ராஷ்மிக்கா மந்தனா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதே நேரத்தில் அவருக்கு ஒரு பாலிவுட் படத்திலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால், அவர் தளபதி 64 படத்தில் படத்தில் நடிக்க மறுத்தாததாக கூறப்படுகிறது.

unknown node

மேலும், நடிகை ராஷ்மிகா, தனக்கு நெருக்கமானவர்களிடம், விஜய் பட வாய்ப்பை தவறவிட்டது ஏமாற்றமளிப்பதாக கூறி வருகிறாராம். இதனையடுத்து, தளபதி 64 படத்தில் நடிப்பதற்கு நடிகை கியாரா அத்வானியை படக்குழுவினர் அணுகி உள்ளனர். இவர் இப்படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.