ஒரு வேளை இருக்குமோ? அந்த நடிகருடன் காரில் பூஜா ஹெக்டே! லீக்கான வீடியோ..

Pooja Hegde

Pooja Hegde : பிரபல நடிகருடன் பூஜா ஹெக்டே காரில் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. இந்த படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வரவில்லை என்ற காரணத்தால் தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார். தெலுங்கில் இவருக்கு தொடர்ச்சியாக படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த நிலையில், அங்கு முன்னணி நடிகையாக வளர்ந்தார்.

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தை தொடர்ந்து தற்போது அவர் மீண்டும் தெலுங்கிற்கு சென்றுவிட்டார். இதற்கிடையில் அவருடைய தனிப்பட்ட வாழ்கை குறித்த தகவல்களும் சமூக வலைத்தளங்களில் உலாவி கொண்டும் இருக்கிறது.

குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பூஜா ஹெக்டே சல்மான் கானுடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதன் பிறகு இதெல்லாம் வெறும் வதந்தி என்பது போல பூஜா ஹெக்டே விளக்கமும் அளித்திருந்தார். அதனை தொடர்ந்து பூஜா ஹெக்டே தற்போது மற்றோரு நடிகர் ஒருவருடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் பரவ தொடங்கி இருக்கிறது.

அந்த நடிகர் வேறு யாரும் இல்லை ரோஹன் மெஹ்ரா சில திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். தற்போது இவருடன் தான் பூஜா ஹெக்டே டேட்டிங் செய்து வருகிறாராம். இப்படியான தகவல் பரவ முக்கிய காரணமே இவர்கள் இருவரும் சமீபத்தில் ஒரே காரில் இருந்தது தான். இவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே காரில் இருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவை வைத்து தான் இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் டேட்டிங் செய்து வருவதாக சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. உண்மையில் இருவரும் டேட்டிங் செய்து வருகிறார்களா என்பதை இவர்களே விளக்கம் கொடுத்தால் மட்டுமே உண்மை என்னவென்பது தெரியவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்