தல அஜித்துடன் மோத உள்ளாரா சூப்பர் ஸ்டார்?!! பேட்ட அப்டேட்ஸ்!!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படத்தை தொடரந்து, 2.O ரிலீஸாக உள்ளது. இதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பேட்ட படத்தில் நடித்து வருகிறார். இப்பட்த்தை சன் பிக்ச்சார்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்க்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் படு வேகமாக நடந்நது வருகிறது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் கூட அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்பட்த்தின் ஷூட்டிங்கை இந்த வருடத்திற்குள் முடித்து விட்டு அடுத்த வருட தொடக்கத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதாவது பொங்கலுக்கு படத்தை வெளியிட படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இன்னும் அதற்கான அதிகாரபூர்வதகவல் எதுவும் வெளிவரவில்லை.
பொங்கலுக்கு ஏற்கனவே தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் ரிலீஸாக உள்ளது குறிப்பிடதக்கது.
DINASUVADU