விவசாயிகளுக்கு புதிய கட்டிடம் கட்டி கொடுத்த மக்கள் செல்வன்!

Default Image

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் சினிமாவில் மட்டுமே அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வளம் வருகிறார். இந்நிலையில், இயக்குனர் ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி லாபம் படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.
இந்நிலையில், இப்படம் விவசாயிகளின் பொருளாதார நிலை பற்றி பேசப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு குன்றத்தூர் அருகே பெறுவயல் கிராமத்தில் நடைபெற்றுள்ளது. அந்த படப்பிடிப்புக்காக விவசயிகள் சங்க கட்டிடம் ஒன்று தேவைப்பட்டுள்ளது.
விஜய்சேதுபதி அந்த கட்டிடத்தை செட்டாக போடாமல் உண்மையான கட்டிடத்தையே கட்ட சொல்லி இருக்கிறார். இதனையடுத்து, படப்பிடிப்பு முடிந்ததும் அந்த கட்டிடத்தை அந்த ஊர் மக்களுக்கே கொடுக்குமாறு கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்