தளபதி விஜயுடன் மோதும் மக்கள் செல்வன்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவரது நடிப்பில் வருடத்திற்கு 2 அல்லது 3 படங்கள் ரிலீசாகிறது.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள சங்கத்தமிழன் திரைப்படம் தீபாவளியன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படமும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாகவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.