RJ பாலாஜியின் 'சிங்கப்பூர் சலூன்' OTT ரிலீஸ் தேதி.!

இயக்குனர் கோகுல் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் சிங்கப்பூர் சலூன். இந்த

Singapore Saloon

இயக்குனர் கோகுல் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் சிங்கப்பூர் சலூன். இந்த திரைப்படத்தை ல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் பேனரின் கீழ் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் RJ பாலாஜியைத் தவிர, சிங்கப்பூர் சலூனில் மீனாட்சி சவுத்ரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜீவா ஆகியோர் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பாசிடிவ் விமர்சனங்களை பெற்று 4 வாரங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. அதன் திரையரங்கு ஓட்டத்தைத் தொடர்ந்து, அதன் ஓடிடியில் வெளியாக காத்திருக்கிறது.

சிங்கப்பூர் சலூன் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

பாக்ஸ் ஆபிஸ் நல்ல வரவேற்பை இப்படம் ஓடிடி தளமான (Tentkotta) ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. நாளை மறுநாள் அதாவது 23ம் தேதி வெள்ளிக்கிழமை Tentkottaல் கண்டு மகிழலாம். இது தொடர்பாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

unknown node