அமரன் OTT: ரிலீஸ் தேதியை உறுதி செய்த நெட்ஃபிக்ஸ்! எத்தனை கோடி தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள அமரன் வரும் 5-ஆம் தேதி OTT-யில் வெளியாக இருக்கிறது.

Amaran ott relese

சென்னை :கடந்த தீபாவளி அன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும், ‘அமரன்’ படத்தின் OTT ரிலீஸ் எப்போது என்ற சஸ்பென்ஸை உடைத்துள்ளது நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம். ஆம், வரும் டிசம்பர் 5-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் வெளியான ‘அமரன்’, மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ராணுவ திரைப்படமாகும். இப்படம் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பைப் பெற்றது.

unknown node

இப்படம் ரூ.130 கோடி செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை  ரூ.350 கோடி வசூல் செய்து சூப்பர் ஹிட் படமாக மாறியுள்ள இப்படம் ரூ.60 கோடிக்கு OTTக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகிருக்கிறது.

அமரன்

இப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க, கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ், லல்லு, ஸ்ரீகுமார், ஷியாம் மோகன், அஜே நாக ராமன், மீர் சல்மான், கௌரவ் வெங்கடேஷ் மற்றும் அபினவ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க, சிஎச் சாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.