நடிகர் விஜய் படங்கள் வெளியானால் கண்டிப்பாக அதற்கு முன்பு அப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்துவிடும். அதில் விஜய் தன்னுடைய ரசிகர்களுக்கு குட்டி கதை ஒன்றையும் கூறுவார். கடைசியாக கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான ‘மாஸ்டர் ‘ படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
unknown nodeVarisu Audio Launch [Image Source: Twitter]
அதனை தொடர்ந்து, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விஜய் நடித்த படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. ஆம் இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்துமுடித்துள்ள ‘வாரிசு ‘படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நேரு உல் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெறுகிறது.
இதையும் படியுங்களேன்-கதை சொல்ல லண்டனுக்கு பறந்த லவ் டுடே பிரதீப்..! யாருக்கு தெரியுமா..?
unknown nodeVarisuAudioLaunch [Image Source : Google]
இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு பல பிரபலங்கள் வருகை தருவார்கள் என தெரிகிறது. எனவே இன்று காலையில் இருந்தே விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் ”#என்நெஞ்சில்குடிஇருக்கும், #VarisuAudioLaunch, ஆகிய ஹஸ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.
unknown nodeVarisu [Image Source: Twitter ]
இந்த வாரிசு திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்திலிருந்து வெளியான 3 பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வரும் 24-ஆம் தேதி படத்தினுடைய மொத்த பாடலும் ஆல்பமாக வெளியாகவுள்ளது.