தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளும் நயன்தாரா.!அப்போ சமந்தா.?

Nayanthara is one of the most popular actresses in Tamil and Samantha is one of the most popular actresses in Telugu.

தமிழில் பிரபலமான நடிகைகளில் நயன்தாரா முதலிடத்தையும் , தெலுங்கில் சமந்தா முதலிடத்தையும் பிடித்து முன்னிலை வகித்துள்ளனர்.

தென்னிந்திய சினிமாவில் உள்ள படங்கள்,நடிகை, நடிகைகளில் ரசிகர்களின் மனதிலிருந்து முதலிடத்தை பிடித்தது உள்ளிட்ட பட்டியலை பல நிறுவனங்கள் வெளியிடும் .அந்த வகையில் அக்டோபர் மாத கணக்கெடுப்பின்படி தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்களின் பட்டியலை மும்பையை சேர்ந்த “ஆர்மேக்ஸ்” என்ற நிறுவனம் வெளியிட்டது.

அந்த பட்டியலின் படி , தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் முதலிடத்தை நயன்தாரா பிடித்துள்ளார் .அதே நயன்தாரா தெலுங்கில் 10-வது இடத்தை பிடித்துள்ளார் .மேலும் தெலுங்கில் பிரபலமான நடிகைகளில் முதலிடத்தை சமந்தா தக்க வைத்துக் கொண்டுள்ளார் .ஆனால் அதே சமந்தா தமிழில் 6-வது இடத்தை பிடித்துள்ளார்.

unknown node

அதே போன்று தென்னிந்திய சினிமாவில் உள்ள நடிகர்களில் முதல் இரண்டு இடங்களில் தமிழில் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் பிடித்துள்ளனர் .அதே போன்று தெலுங்கில் முதலிடத்தை அல்லு அர்ஜுன் அவர்களும், இரண்டாவது இடத்தை பிரபாஸ் அவர்களும் பிடித்துள்ளனர்.