விக்கி தலையில் செல்லமாக தட்டிய நயன்… “பேரழகி தான்” திருமண ஆவணப்படத்தின் டிரெய்லர்.!

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்பட வீடியோ டிரெய்லரை நெட்ஃபிக்ஸ் வெளியிட்டது.

Nayanthara On Netflix

சென்னை : தென்னிந்திய சினிமாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் ஜூன் 9, 2022 அன்று சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ரிசார்ட்டில் நடைபெற்றது.

திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, திருமண வீடியோவை நெட்ஃபிக்ஸ் இல் வெளியிட தற்பொழுது தயாராக உள்ளது. ஆம், இந்த ஆவணப்படம் வரும் 18ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இதனை முன்னிட்டு,  ‘நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்’ ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. நயன்தாராவின் ஆவணப்படம் திருமண வீடியோவாக மட்டும் தயாரிக்கப்படவில்லை.

அந்த ஆவணப்படத்தில் நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து இந்த ஆவணப்படம் தயாராகியுள்ளது. மேலும், இந்த டிரெய்லரில் நடிகையின் அம்மா ஓமனா குரியன் முதல் இயக்குனர் நெல்சன் வரை ஆவணப்படத்தில் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

திருமண ஆவணப்படத்தின் கால அளவு ஒரு மணி நேரம் 21 நிமிடங்கள் இருக்கும்.  நயன்-விக்கி திருமண விழாவில் ஷாருக்கான், திலீப், சூர்யா, விஜய் சேதுபதி, கார்த்தி, சரத்குமார், இயக்குநர்கள் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர், அதையும் ட்ரைலரில் காட்டப்படுகிறது.

குறிப்பாக, இந்த வீடியோவில் நயன்-விக்கி காதல் இணக்கத்தை எடுத்துரைக்கிறது. இதில் வரும் இறுதி காட்சியில் நயன்தாரா விக்கியின் தலையில் செல்லமாக தட்டியதும். உடனே விக்கி “ஓ கொசுவா என்று கேட்க நயன் இல்லையே என்கிறார். அதற்கு பாத்தீங்களா இப்படி தான் நடக்கும் என ஜாலியாக” கூறினார்.

இந்த ஆவணப்படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். இவர்களது திருமணத்தின் ஸ்ட்ரீமிங் உரிமைக்காக நெட்ஃபிக்ஸ் நிறுவனம் நயன்தாரா மற்றும் விக்னேஷ்க்கு 25 கோடி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்