#Breaking: விஸ்வாசம் பட இசையமைப்பாளருக்கு தேசிய விருது அறிவிப்பு!

D. Iman, the composer of the film "Viswasam" starring Ajith Kumar has been awarded the National Award by the Central Government.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான “விஸ்வாசம்” படத்தின் இசையமைப்பாளர் D.இமான்க்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களுக்கான 67-வது தேசிய விருதுகள், இன்று அறிவிக்கப்பட்டன. இந்த விழா, கொரோனா பரவல் காரணமாக டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைதொடர்ந்து நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான “விஸ்வாசம்” படத்தின் இசையமைப்பாளர் D.இமான்க்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த ஓத்த செருப்பு படத்திற்கு இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.