எருமைகளை ரேப் செய்யும் காட்சியை வைப்பேன்! மிஷ்கின் பேசிய வீடியோவை வெளியீட்டு கொந்தளித்த ப்ளூ சட்டை!

Blue sattai Maran mysskin

நடிகர் மன்சூர் அலிகான் பேசிய விஷயம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரைப்போல முன்னதாக சில பிரபலங்கள் பேசிய பழைய வீடியோக்களும் வைரலாகி வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பாடகி சின்மயி ராதா ரவி ஐஸ்வர்யா ராயை பற்றி பேசிய வீடியோவை வெளியீட்டு இருந்தார்.

ஹிந்தி மட்டும் தெரிஞ்சிருந்தா ஐஸ்வர்யா ராயை கெடுதிருப்பேன்! ராதா ரவி வீடியோவை வெளியிட்ட சின்மயி!

அதனை தொடர்ந்து தற்போது சினிமா விமர்சகரும், இயக்குனருமான ப்ளூ சட்டை மாறன் மிஷ்கின் பேசிய வீடியோ ஒன்றை வெளியீட்டு கொந்தளித்துள்ளார். அந்த வீடியோவில் இயக்குனர் மிஷ்கின் ” ஜெகதீஸ் என்னிடம் என்னை எப்படியாவது ஹீரோ ஆக்கி விடுங்கள் என்று கேட்டிருக்கார். நான் அவரிடம் ஹீரோ ஆவது எல்லாம் பெரிய கஷ்ட்டம் இல்லை என்று கூறி இருக்கிறேன்.

அவன் என்னிடம் ஹீரோவாகவேண்டும் என்று விருப்ப பட்டு கேட்ட காரணத்தால் அடுத்த படத்தில் 4,5 எருமை மாடுகளை ரேப் செய்யும் காட்சிகளை கொடுக்கலாம் என்று நினைத்திருக்கிறேன் என தெரிவித்து இருந்தார். இதனை கேட்டு செய்தியாளர்கள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த ஜிவி பிரகாஷ், வெற்றிமாறன் ஆகியோர் சிரித்தார்கள்.

ஜாலியா பேசினேன் த்ரிஷா தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க! மன்சூர் அலிகான் பேட்டி

அந்த வீடியோவை வெளியிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன் “எளிய மக்களுக்காக அவ்வப்போது குரல் தரும் ஜி.வி.பிரகாஷ்.. உங்களுக்கு இந்தப்பேச்சு எப்படி சிரிப்பை வரவழைத்தது?  என்ற கேள்வியையும், பிரபல இயக்குனருக்கும், வில்லன் நடிகருக்கும் தனித்தனி அளவுகோல் வைத்துள்ளீர்களா? என கேள்வியும் எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது “ஜி.வி.பிரகாஷ், கௌதம் வாசுதேவன் நடித்த செல்ஃபி படத்தின் ப்ரெஸ் மீட்டில் மிஷ்கின் பேசியதுதான் இந்த வீடியோ. இந்த அநாகரீக பேச்சிற்கு ஜி.வி.பிரகாஷ் சிரித்து மகிழ்கிறார். வெற்றிமாறனாவது கண்டிப்பார் என பார்த்தால்.. அவரும் சிரித்தபடி அமர்ந்திருந்தது கொடுமை. விலங்குகளில் கேவலமானது எருமைமாடு, நிறங்களில் மட்டமானது கருப்பு எனும் இழிவான எண்ணத்துடன் எருமை பற்றி இப்படி பேசியிருப்பது உலக சினிமா மாமேதை, புத்தகப்புலியான மிஷ்கினுடைய பிற்போக்குத்தனத்தின் உச்சம். ரேப் எனும் வார்த்தையை நாகரீக உலகில் யாரும் பயன்படுத்துவதில்லை.

Sexual Assault உள்ளிட்ட வேறு வார்த்தை பிரயோகங்கள் பொதுத்தளத்தில் எபாபோதே வந்துவிட்டது பற்றிக்கூட தெரியாமல் இருக்கிறார். ஏழெட்டு எருமைகளை ரேப் செய்யும் காட்சியை வைப்பேன் என்று சொல்வதை விட மகா மட்டமான சொற்கள் உண்டா? இதையெல்லாம் தட்டிக்கேட்காத திரையுலக மேதாவிகள், மகளிர் அமைப்பு மாந்தர்கள்.. மன்சூரை மட்டும் குதறிக்கொண்டு இருப்பது ஏன்? இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை.

இப்படி மிஷ்கின் பேசியது பற்றி இன்றாவது வெற்றிமாறனும், மன்சூருக்கு எதிராக கொந்தளித்த திரையுலகத்தினர் மற்றும் சமூக ஆர்வக்கோளாறுகளும் கண்டனம் தெரிவிப்பார்களா அல்லது பம்மிக்கொண்டு இருப்பார்களா? எளிய மக்களுக்காக அவ்வப்போது குரல் தரும் ஜி.வி.பிரகாஷ்.. உங்களுக்கு இந்தப்பேச்சு எப்படி சிரிப்பை வரவழைத்தது? பல மேடைகளில் கெட்டவார்த்தைகள் பேசும் மிஷ்கினை விட்டுவிட்டு.. ஒருவாரமாக மன்சூருக்கு மட்டும் அதீத முக்கியத்துவம் தருவது ஏன்? பிரபல இயக்குனருக்கும், வில்லன் நடிகருக்கும் தனித்தனி அளவுகோல் வைத்துள்ளீர்களா? அல்லது மன்சூரின் மதம்தான் உங்களுக்கு பெரிய பிரச்னையாக படுகிறதா?” என காட்டத்துடன் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்