"ரசிகர்களை சந்திக்கும் மும்தாஜ்"மடல் அனுப்பி அசத்திய ஆர்மி..!!!

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மும்தாஜ் அவரது ரசிகர்களை சந்திக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை `மும்தாஜ் ஆர்மியினர்' மேற்கொண்டுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மும்தாஜ் அவரது ரசிகர்களை சந்திக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை `மும்தாஜ் ஆர்மியினர்’ மேற்கொண்டுள்ளனர்.

unknown node

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சியில் மமதி, அனந்த் வைத்தியநாதன், மும்தாஜ், பொன்னம்பலம், பாலாஜி, ஜனனி, ரித்விகா உள்ளிட்ட 16 பேர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். இதில் 80 நாட்களுக்கும் அதிகமாக பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக தங்கியிருந்த மும்தாஜ் கடந்த வாரம் மக்களின் வாக்குகள் மூலம் வெளியேற்றப்பட்டார்.

https://twitter.com/mumtaz_foreverr/status/1042117142705913856

ஆனால், அவர் வீட்டில் தங்கியிருந்த நாட்களில் அவரது செயல்பாடுகள் ரசிகர்கள் பலரையும் கவர்ந்திருந்தன. இதன் வெளிப்பாடாக சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் `மும்தாஜ் ஆர்மி’ என்ற பக்கத்தை தொடங்கினர்.

unknown node

அதனால் வாட்ஸ் அப், ட்விட்டர் ஆகிய சமூக வலைதளங்களில் குழுக்களை ஆரம்பித்தோம். அதனைத் தொடர்ந்து திருவள்ளூரில் இருக்கும் கே.பி.ஆர். மஹாலில் வரும் 22-ம் தேதி ரசிகர்களை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளோம். இந்த நிகழ்வில் மும்தாஜ், வைஷ்ணவி, ஆர்த்தி ஆகியோர் கலந்துகொள்ள இருக்கின்றனர். நிகழ்ச்சியில் சுமார் 2000-க்கும் அதிகமான ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்று கூறினார்.

unknown node

இதுகுறித்து மும்தாஜ் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ரசிகர்களை சந்திக்க இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு ரசிகர்கள் அனைவரையும் அவர் வரவேற்றுள்ளார்.

unknown node

DINASUVADU

"ரசிகர்களை சந்திக்கும் மும்தாஜ்"மடல் அனுப்பி அசத்திய ஆர்மி..!!!